2 2
இலங்கைசெய்திகள்

அரசுக்கு இருக்கும் சிறந்த மாற்று வழி: சஜித் எடுத்துரைப்பு

Share

அரசுக்கு இருக்கும் சிறந்த மாற்று வழி: சஜித் எடுத்துரைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் மாத்திரமே நாட்டின் வங்குரோத்தை மாற்றியமைக்க தற்போதைய அரசுக்கு இருக்கும் ஒரே மாற்று வழியாகும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மஹரகமவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளன.

நாட்டுக்குத் தீர்வுகளை வழங்கும் பொறுப்பு வெற்றி பெற்ற அணியினருக்கும் போலவே தோற்கடிக்கப்பட்ட அணியிருக்கும் காணப்படுகின்றன.

இந்த பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் தயாராக வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும் குழுவாக அவர்கள் மாற வேண்டும்.

வெற்றி பெற்றவர்களிடம் மட்டும் பொறுப்புகளை ஒப்படைப்பது வங்குரோத்தான நாட்டுக்கு ஏற்புடையதல்ல.

இதற்காக அனைவரும் கைகோர்க்க வேண்டும். நாட்டைகே கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் எதிர்க்கட்சி முன்னோடியான வேலைத்திட்டத்தைக் கொண்டிருக்கின்றது.

அதிலிருந்து பின்வாங்க முடியாது. இந்நாடு அனைவருக்கும் சொந்தமானது. பிரச்சினைகளைத் தீர்க்கும் சக்தியாகவே ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றது. இந்த வெற்றி பொது வெற்றியாக அமைய வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...