12 17
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் உரை நாடாளுமன்ற ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கம் – சபாநாயகர் நடவடிக்கை

Share

அர்ச்சுனாவின் உரை நாடாளுமன்ற ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கம் – சபாநாயகர் நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Arjuna) யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும், நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டது.

இதனையடுத்து நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின் போதுநாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்க சபாநாயகர் அனுமதியளித்தார்.

முதலில் யாழ். வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் தெளிவாகப் பேசிய அர்ச்சுனா பின்னர் நிலையியற் கட்டளைகளுக்கும் சபைக்கு முரணாகவும் பேசத் தொடங்கினார்.

அப்போது சில தடவைகள் குறுக்கிட்ட சபாநாயகர், விசேட கூற்று தொடர்பான ஆவணத்தில் என்ன இருக்கின்றதோ அதை மட்டும் பேசுமாறு வலியுறுத்தியபோதும் அர்ச்சுனா அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அர்ச்சுனா எம்.பி., முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரையும் கடுமையாக விமர்சித்தார்.

இதன்போது சபாநாயகரால் அர்ச்சுனா எம்.பி.க்கு மீண்டும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சியினரும் அரச தரப்பினரும் அர்ச்சுனா எம்.பி.யுடன் முரண்படத் தொடங்கினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ந்து விடயத்துக்கு முரணாகவே பேசிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “அர்ச்சுனா எம்.பி. யாழ். வைத்தியசாலை தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்கின்றார்.

ஆனால், விசேட கூற்றை முன்வைப்பதாயின் அதனுடன் தொடர்புபட்ட அமைச்சருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆனால், இந்தக் கூற்று தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு அறிவிக்கப்படவில்லை.

ஆகையால், இவருக்கு நாடாளுமன்றச் செயலாளர் எவ்வாறு கூற்றை முன்வைக்க அனுமதித்தார் எனக் கேட்கின்றேன். அத்துடன், இவர் விடயத்துக்கு முரணாகப் பேசும் விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இவ்வாறு சபை முதல்வர் கூறிக்கொண்டிருந்த போதும் அர்ச்சுனா எம்.பி. கொண்டிருந்தார். இந்நிலையில் அவரின் நிலையியற் கட்டளைகளுக்கு முரணான கருத்துக்களை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்குமாறு சபாநாயகர் அறிவித்தார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...