28 7
இலங்கைசெய்திகள்

விண்வெளி ஆய்வில் வியக்க வைக்கும் சாதனையை தனதாக்கிய எலான் மஸ்கின் நிறுவனம்

Share

விண்வெளி ஆய்வில் வியக்க வைக்கும் சாதனையை தனதாக்கிய எலான் மஸ்கின் நிறுவனம்

உலகளாவிய விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் படைத்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சுப்பர் ஹெவி பூஸ்டர் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பியதன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்சிப் யைஹெவி பூஸ்டர் விண்கலம் மீண்டும் ஏவப்பட்ட இடத்திற்கே திரும்பச் செய்து ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போகோசிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று அக்டோபர் 13 ஆம் திகதியன்று, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தனது 400 அடி உயர ஐந்தாவது ஸ்டார்சிப் விண்கலத்தை சோதனை முயற்சியாக விண்ணில் ஏவியது.’

இந்தநிலையில் விண்ணில் ஏவப்பட்ட 7 நிமிடங்களில் விண்கலத்தில் இருந்த சுப்பர் ஹெவி பூஸ்டர் மீண்டும் ஏவுதளத்திற்கே திரும்பியது.

ஏற்கனவே இதற்கு முன்னர் ஏவப்பட்ட பூஸ்டர் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்பவில்லை. எனினும் இந்த முறை, மிக துல்லியமான முறையில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து, 5000 மெட்ரிக் தொன் எடை கொண்ட சுப்பர் ஹெவி பூஸ்டர் விண்கலம் மீண்டும் ஏவுதளத்துக்கே திரும்பியுள்ளது.

இதன்படி பூமிக்கு திரும்பிய ஹெவி பூஸ்டர் விண்கலத்தை “மெக்காஸில்லா” எனப்படும் மிகப்பெரிய லோன்ச்பேட் இயந்திரத்தில் உள்ள ‘சொப்ஸ்டிக்ஸ்’ எனப்படும் பிரம்மாண்ட கைகளை போன்ற கருவி பிடித்து தரையிறக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...