களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
42 வயதுடைய நபரே இதன்போது பலியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு சந்தேகநபரும் கைதுசெய்யப்படவில்லை.
எனினும், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தெற்கில் அண்மைய நாட்களாகத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
#SriLankaNews
Leave a comment