சமையல் எரிவாயு கொள்கலன் தொடர்பில் இந்த வாரத்துக்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றில் உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எரிவாயு கொள்கலன்களில் வெடிப்புகள் ஏற்படுவதால் மக்கள் அதிகளவு அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். எனினும் இதற்கான காரணம் இதுவரை தெளிவாக கண்டறியப்படவில்லை.
இந்தநிலையில் இது தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெற்றதும் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எாிவாயு கொள்கலன்களில் மேற்கொள்ளப்பட்ட கலவை விகிதம் காரணமாகவே வெடிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் தகவ்ல்கள் வெளியாகியுள்ளன.
#SriLankaNews
Leave a comment