கிழக்கு மாகாணத்தில் மணல் அகழ்ந்து மாலைதீவில் யாருக்கு வீடு கட்டுகிறீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்துவது கிழக்கில் மண் அகழ்வதற்கா? வரையறை இல்லாமல் மண்ணை அகழ்ந்து மாலைதீவுக்கு கொண்டுசெல்கிறீர்கள். இது என்ன அடிப்படையில் நடைபெறுகிறது என காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கருத்து தெரிவிக்கையில்,
அரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழ் உறுப்பினர்களே, உங்களுக்கு முழுகெலும்பு இருந்தால் தோட்டக் காணிகளை வெளிநாட்டுக்கு விற்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனை தடுத்து நிறுத்தங்கள் பார்ப்போம். இல்லையேல் பதவியை தூக்கி எறியுங்கள். காணிகளை விற்பதற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கூலித் தொழிலாளர்களாக இருக்கும் எமது மக்களை இன்னும் 100 ஆண்டுகளுக்கு அடமானம் வைப்பதற்கான நடவடிக்கையை இந்த அரசு முன்னெடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Leave a comment