நாட்டில் நள்ளிரவு முதல் சமூக வலைத்தள பக்கங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
பேஸ்புக், வாட்ஸ் அப், வைபர், இன்ஸ்டாகிராம் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
நாட்டில், பொருட்கள் விலையேற்றம், மின் தடை, எரிபொருள் தட்டுப்பாடு என மக்கள் பல இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நாளை நாடளாவிய ரீதியில் இன, மத பேதமின்றி அரசுக்கெதிராக தன்னெழுச்சி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், , நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஊரடங்கு உத்தரவும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தள பக்கங்களும் திடீரென முடங்கியுள்ளன. இருப்பினும் இதற்கான கரணம் இதுவரை வெளியாகவில்லை.
#SriLankaNews
Leave a comment