rtjy 305 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கையிலிருந்து சட்டவிரோத மனிதக் கடத்தல்

Share

இலங்கையிலிருந்து சட்டவிரோத மனிதக் கடத்தல்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் இந்தியாவின் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் இம்ரான் கான் என்ற சந்தேக நபரே இந்திய தேசிய புலனாய்வு முகமைத்துவ பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நாட்டின் இராமநாதன்புரம் பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேக நபர் நீண்டகாலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில் 2021ஆம் ஆண்டு முதல் அவரைக் கைது செய்ய இந்திய பாதுகாப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இந்த கடத்தல்காரர் கனடாவில் வேலை வாங்கி தருவதாக பொய்யான தகவல்களை கூறி இலங்கையர்களை தமிழ்நாடு மற்றும் பெங்களூரு வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளதை இந்திய பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 இந்தியர்களை இந்திய தேசிய புலனாய்வு முகமை இதற்கு முன்னர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 17
இலங்கைசெய்திகள்

யாழில் பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த கொடூரம்!

யாழ்ப்பாணத்தில் தனது 6 வயது பெண் பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தையொருவர் தலைமறைவாகியுள்ளார்....

9 17
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும்: விஜித ஹேரத்

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும். ஐக்கிய மக்கள் சக்தி குறைவான ஆசனங்களை...

8 17
இலங்கைசெய்திகள்

2025ஆம் ஆண்டில் ஆசியாவின் வளர்ச்சி பெறும் பட்டியல்! இலங்கை உள்ளடக்கப்படவில்லை

2025ஆம் ஆண்டில் ஆசியக் கண்டத்தில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியை அடையக்கூடிய நாடுகளின் எதிர்வுகூறல் பட்டியலை சர்வதேச...

7 17
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்துக்கு பின்: இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை

போர் நிறுத்தத்துக்கு பின்னர் முதல் தடவையாக, இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்....