கட்சியின் தீர்மானத்தை மீறி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.
நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்குக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவர்கள் இருவர் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என மத்திய குழு உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமையவே நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment