1 34
இலங்கைசெய்திகள்

தமிழரசுக் கட்சிக்குள் குளறுபடி! பழிவாங்கப்பட்ட சிவமோகன்

Share

தமிழரசுக் கட்சிக்குள் குளறுபடி! பழிவாங்கப்பட்ட சிவமோகன்

இலங்கை தமிழரசுக் கட்சியின்(ITAK) முல்லைத்தீவு மாவட்டக் கிளைத் தலைவர் மருத்துவர் சி.சிவமோகனை (S. Sivamohan) கட்சியில் இருந்து இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால், சிவமோகனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், “வவுனியாவில் (28.12.2024)ஆம் திகதி நடைபெற்ற எமது கட்சியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, தாங்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்படுகிறீர்கள் என்பதை இத்தால் அறியத்தருகிறேன்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024 காலப்பகுதியில் கட்சியின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர்களுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை ஊடகங்களில் தெரிவித்து, கட்சிக்கும் கட்சிசார்ந்த வேட்பாளர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் வெளிப்படையாக ஈடுபட்டதை கட்சி அறிந்துள்ளது.

எனவே, இச்செயற்பாட்டிற்காக உங்களிடம் விளக்கம் கோருவதோடு உங்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் நிறைவுபெறும் வரை தாங்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளீர்கள் என அறியத்தருகிறேன்.

உங்கள் விளக்கத்தை இக்கடிதம் கிடைத்து ஒருவார காலத்திற்குள் எனக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...