இந்து மக்களால் நாளை அனுஷ்டிக்கப்பட இருக்கும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தை உட்பட பொதுவாக அனைத்து சந்தைகளிலும், அவற்றை அண்டியுள்ள பகுதிகளிலும் வியாபாரிகள் சிட்டி வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது.
தமது வீடுகளிலும், ஆலயங்களிலும் தீபமேற்றி வழிபடுவதற்காக மக்கள் பலரும் ஆர்வத்துடன் சிட்டிகளைக் கொள்வனவு செய்து செல்கின்றமை காணக்கூடியதாக இருக்கிறது.
#SriLankaNews
Leave a comment