28 11
இலங்கைசெய்திகள்

தமிழருக்குத் தம்மை தாமே ஆளக்கூடிய சுயநிர்ணய உரிமை மிகவும் அவசியம்: ஜனாதிபதி வேட்பாளர் இடித்துரைப்பு

Share

தமிழருக்குத் தம்மை தாமே ஆளக்கூடிய சுயநிர்ணய உரிமை மிகவும் அவசியம்: ஜனாதிபதி வேட்பாளர் இடித்துரைப்பு

தமிழ் மக்களுக்கு தம்மை தாமே ஆளக்கூடிய சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு மிகவும் அவசியம் என்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்,

“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணாமல் இலங்கையால் ஓர் அங்குலமேனும் முன்னோக்கிச் செல்ல முடியாது. பொருளாதாரப் பிரச்சினை மட்டும் அல்ல, இனப்பிரச்சினையும் பாரதூரமான பிரச்சினையாகும்.

தேர்தல் நெருங்கும் வேளையில்தான் 13ஆம் சட்ட திருத்தம் பற்றி பேசப்படுகின்றது. இது நகைச்சுவைத்தனமான செயற்பாடாகும். மாகாண சபை முறைமை நடைமுறையில் உள்ளது. அதன்மூலம் பிரச்சினை தீர்ந்ததா? குறைந்தபட்சம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களாவது பகிரப்பட்டதா? இல்லை.

அவ்வாறு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கி இருந்தால் கூட ஓரளவு நம்பிக்கையை வென்றிருக்கலாம். ஜனாதிபதி வேட்பாளர்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எம்மிடம் மட்டுமே உள்ளது. நாம் சுயநிர்ணய உரிமையை ஏற்கின்றோம்.

13ஆம் சட்ட திருத்தம் தீர்வாக அமையாது. அதற்கு அப்பால் சென்று தமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை தமிழர்களுக்கு வழங்கப்படும். ஸ்கொட்லாந்தில் போன்று இங்கு தீர்வு வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...