மிரிஹான பெங்கிரிவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் இதுவரை பெண்ணொருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் – என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
பொலிஸ் தரப்பில் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து பொலிஸார் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன், பொலிஸ் பஸ்ஸொன்றுக்கும், பொலிஸ் ஜீப்புக்கும், இரு சைக்கிள்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர் என போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews