BhB1EbMdYZJR1CdAvaQB
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் விற்பனையாளரின் வீடு முற்றுகை!

Share

புத்தளம் கரம்பை உலுக்காப்பள்ளம் பகுதியில் போதை வியாபாரிகளுக்கும் அப்பகுதி இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து போதை வியாபாரத்தை நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்கள் போதை வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் கரம்பை உலுக்காப்பள்ளம் கிராமத்தில் அதிகரித்து வரும் போதை வியாபாரத்தை நிறுத்துமாரு கோரி அப்பகுதி மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போதைப் பொருளை விற்பனை செய்யவண்டாமென்று தெரிவித்த இளைஞர்கள் மீது போதை வியாபாரிகள் நேற்று இரவு தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி இளைஞர்களும் போதை வியாபாரிகளைத் தாக்கியுள்ளனர். இதன்போது போதை வியாபாரிகளுக்கும் அப்பகுதியிலுள்ள இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊர்மக்கள் ஒன்று திரண்டு போதை வியாபாரத்தை நிறுத்துமாறு கோரி கரம்பை உடப்பு சந்தியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டு பேரணியாக சென்று போதை வியாபரியின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு நுரைச்சோலைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சிவில் உடையில் வருகைத் தந்திருந்தார்.

இதன்போது அப்பகுதி மக்களுடன் பொலிஸ் அதிகாரி இரண்டு கிழமைகக்குள் போதை வியாபாரத்தை அவ்விடத்திலிருந்து நிறுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டுவிட்டு அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...