பைசர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம், தேவையற்ற பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும், வைரஸ் தொடர்பான விசேட நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்படி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விஞ்ஞான ரீதியில் பைசர் தடுப்பூசியின் செயற்பாடு தொடர்பில் சந்தேகம் நிலவுகிறது. கொரோனா பரவலுக்கு பின்னான காலத்திலேயே பைசர் தடுப்பூசி, முதல் தடவையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில். நாட்டில் பைசர் தடுப்பூசி இறக்குமதியை குறைத்து இயன்றளவு, மாற்று தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்றார்.
#SriLankaNews
Leave a comment