ரத்மலானை சில்வா மாவத்தை பகுதியில் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்த இருவர், வீட்டில் இருந்த நபர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தவிட்டு, தப்பியோடியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ரத்மலானை சில்வா மாவத்தையில் வசிக்கும் 30 வயதுடைய ஆட்டோ ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கொலைக்கு டி-56 ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
Leave a comment