நாட்டில் இன்று மின் தடை ஏற்படாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் பழுதடைந்த மின் பிறப்பாக்கி பழுதுபார்க்கப்பட்டுள்ளதால், இன்று மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னதாக நாட்டின் சில பகுதிகளில் இன்று (12) முதல் மின்சாரம் தடைப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே சற்று முன்னர் பழுதடைந்த இயந்திரம் சரி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்சாரம் தடைப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment