Senior Professor Buddhi Marambe e1653801064235
இலங்கைசெய்திகள்

ஒக்டோபரில் அரிசிக்குத் தட்டுப்பாடு! – பேராசிரியர் எச்சரிக்கை

Share

தவிர்க்க முடியாத வகையில் இந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்று பேராதனைப் பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறுபோகம் தற்போது பாதியளவு நிறைவடைந்து விட்டது. போதுமான அளவு இரசாயன உரம் இதுவரையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

இந்த முறை 3 இலட்சத்து 15 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் சிறுபோகம் இடம்பெறுகின்றது.

வழமையாக சுமார் 4 இலட்சம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் சிறுபோகம் இடம்பெறும்.

சிறுபோகத்துக்காக 80 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் அவசியமாகின்றது.

எனினும், தற்போது நாட்டில் இரசாயன உரத்துக்கான தட்டுப்பாடு நிலவுவதோடு அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் இந்த முறை சிறுபோக விளைச்சல் 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...