ஓட்டுனர்கள் பற்றாக்குறை – ரயில்கள் ரத்து

train tours 10 sri lanka

www.mmsvision.com

ஓட்டுனர்கள் பற்றாக்குறையினால் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ஓட்டுனர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டதாகவும் ஆனால் இதுவரையில் திருப்திகரமான மறுமொழிகள் எதுவும் கிடைக்கவில்லையெனவும் ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்ட 20 ற்கும் அதிகமான ஓட்டுனர்கள் ஓய்வு பெற்றமையே இந்த நிலைக்குப் பிரதான காரணம் எனவும் இது தொடர்பாக அரச அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.

அநுராதபுரம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பதுளைக்கு செல்லும் நீண்ட தூர ரயில் சேவைகள், சரக்கு மற்றும் எரிபொருள் போக்குவரத்து ரயில்கள் மற்றும் திருகோணமலைக்கு கோதுமை மாவை ஏற்றிச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் எதிர்காலத்தில் பல ரயில்களை ரத்து செய்ய நேரிடும் என்றும் அவர் மேலும்  தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version