கச்சா எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஆலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் 51 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.
கச்சா எண்ணெய்யுடனான கப்பல் எதிர்வரும் டிசெம்பர் மாதம் மூன்றாம் வாரத்திலேயே நாட்டுக்கு வருகை தரவுள்ளது. அதனால் அதுவரை சபுஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது என பெற்றோலிய பொது ஊழியர் சங்கத் தலைவர் அசோக்க ரன்வல தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் டிசெம்பரில் நாட்டுக்கு வருகை தரும் கப்பலில் 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் கொண்டு வரப்படவுள்ளது எனவும் அது 15 நாட்களுக்கு மாத்திரமே போதுமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதிலேயே மற்றொரு கப்பல் வருகை தரும் எனவும் அறிய முடிகிறது.
எனினும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் தேவையான எரிபொருள் நாட்டில் உள்ளது எனவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படின் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment