20
அரசியல்இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு விவகாரம்: பேராயரின் மௌனம் குறித்து ராஜபக்‌ஷ தரப்பு கேள்வி!

Share

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரத்தில், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தற்போது மௌனம் காப்பது ஏன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேள்வி எழுப்பியுள்ளது. அக்கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ குட்டியாராச்சி இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதான் நடத்தியது என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முப்பது வருட காலப் போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்த தலைவரைக் கொண்ட எமது கட்சிக்கு, குண்டுகளை வைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் கிடையாது என்று குட்டியாராச்சி குறிப்பிட்டார்.

தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டறிந்து கைது செய்வோம் என்று தேசிய மக்கள் சக்தியினர் மேடைகளில் முழக்கமிட்டனர். தற்போதைய அரசு அந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எமது ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதியில் இறங்கிப் போராடினார். ஆனால், புதிய அரசு பதவியேற்ற பிறகு அவர் மௌனமாக இருக்கின்றார். பேராயர் மீண்டும் வீதிக்கு வந்து, தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்குமாறு இந்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...