நீதிமன்றத்துள் துப்பாக்கிப் பிரயோகம்!

gun shot 1200 1

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் உள்நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் இருந்த பிரதிவாதியை குறிவைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு அவர்மீது சூடு படவில்லை.

இதனையடுத்து சூடு நடத்தியவர் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுள்ளார்.

சினிமாப்பாணில் அரங்கேறிய இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் அச்ச நிலையும் உருவானது.

#SriLankaNews

Exit mobile version