அரியாலை பகுதியில் துப்பாக்கி சூடு! – ஒருவர் படுகாயம்

sl army

மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுவினர் மீது இன்று மாலை துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மாலை யாழ்ப்பாணம் – அரியாலை – நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுவினரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்தவர்களில் ஒருவர் படுகாயமடைந்ததுள்ளார். படுகாயமடைந்த அவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் அரியாலை முள்ளியைச் சேர்ந்த யசிந்தன் (வயது – 27) என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை, குறித்த உழவு இயந்திரம் மணல் ஏற்றிய பெட்டியுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version