24 6600ea977f40f
இலங்கைசெய்திகள்

வடக்கில் சிறுமிகள் மீதான தவறான நடத்தை தொடர்பில் தகவல்

Share

வடக்கில் சிறுமிகள் மீதான தவறான நடத்தை தொடர்பில் தகவல்

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகளின் பிரகாரம் பதிவான தவறான நடத்தை சம்பவங்களில் 70 சதவீதமானவை பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சம்மதத்துடனேயே இடம்பெற்றுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பொலிஸ் திணைக்களத்திடம் கோரப்பட்ட தகவல்கள், வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரத்னவால் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் தவறான நடத்தைகள் தொடர்பில் 131 பொலிஸ் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 90 சம்பவங்கள் சிறுமிகளின் இணக்கத்துடன் இடம்பெற்றுள்ளதுடன் 33 சம்பவங்கள் மாத்திரமே அவர்களின் இணக்கமில்லாது நடந்துள்ளன.

மேலும், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 143 சந்தேகநபர்கள் கைதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...