24 6600dc54722de
இலங்கைசெய்திகள்

கொழும்பிற்கு அவசரமாக அழைக்கப்படும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்

Share

கொழும்பிற்கு அவசரமாக அழைக்கப்படும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்

வார இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும் மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வது கட்டாயம் என அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் முயற்சியின் கீழ் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் செயற்பாடுகளையும் ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் மைத்திரியின் அரசியல் சந்திப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இந்த புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...