இலங்கையிலுள்ள சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலைப் பொங்கல் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டபோதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க வேண்டுமாக இருந்தால் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புத் தேவை. ஆகவே ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும்.
மேலும் பலர் சிறைகளிலேயே படுகொலை செய்யப்படிருக்கிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment