சித்திரவதைக்குள்ளாகும் சாந்தன்! ரணிலுக்கு பறந்த கடிதம்
32 ஆண்டுகள் சிறையில் வாடும் முருகன்,சாந்தன்,ராபர்ட் பெயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யகோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (05.07.2023) போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பிறகும் சிறப்பு சிறை முகாமில் அவர்களை அடைத்து வைப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உள்ளிட்ட நால்வர் சிறப்பு என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சாந்தனுடைய வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
Leave a comment