d 1 scaled
இலங்கைசெய்திகள்

தந்தையால் மகளுக்கு கொடுமை!

Share

தந்தையால் மகளுக்கு கொடுமை!

தனது மகளை தகாத முறையில் நடத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை கொபேகனே பொலிஸாரால் நேற்று (01.12.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் சுமார் 02 வருடங்களாக 12 வயது மகளை தகாத முறையில் நடத்தியதாக கொழும்பு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்திருந்தது.

இந்த தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொபேகனே பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில், விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்னிகம, வித்திகுளிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வவுனியா பம்பைமடு 17 வது காலாட்படை முகாமில் ஊழியராக பணிபுரிவது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நிகவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
ஹர்ஷன நாணயக்கார
இலங்கை

மஹர சிறைச்சாலை கலவரம் திட்டமிட்டு செய்யப்பட்டதா?

சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒரு சதியாக, மஹர சிறைச்சாலை கலவரம் இடம்பெற்றிருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்துள்ளதாக...

pillaiyaaan
இலங்கை

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிள்ளையான்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை...

school open
இலங்கை

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மூடப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்.

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை...

road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...