நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.
இவ்வாறு இலங்கை அரசாங்கத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ரஜீவ் அமரசூரிய விடுத்துள்ள அறிக்கையில்,
பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு, நிதி ஆதாரங்களை கண்டுபிடிக்க வேண்டும். அத்துடன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன, பாரபட்சமற்ற நிபுணர்கள் (உள்நாடு மற்றும் சர்வதேச) மற்றும் பலதரப்பு நிறுவனங்களின் உதவியை நாடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment