பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏழு கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறுகுற்றங்களை புரிந்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்களே இவ்வாறு சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் 173 கைதிகளுக்கு இன்றைய தினம் பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்திருந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் எழு கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
#SriLankaNews
Leave a comment