“வரிசை” என்பதே இன்று இலங்கையின் நாமமாக மாறியுள்ளது – ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹினி குமாரி விஜேரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” முன்னர் எல்லாம் ‘சிலோன் டீ’ என்பதே இலங்கையின் அடையாளமாக, நாமமாக இருந்தது. எமது நாட்டுக்கு நற்பெயரும் இருந்தது. ஆனால் நாட்டில் இன்று எதற்கெடுத்தாலும் வரிசை. உணவுப் பொருட்களை வாங்கக்கூட வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. இதனால் வரிசை என்பதே நாட்டின் நாமமாக மாறியுள்ளது.
அதேவேளை, பெண்கள் பற்றி இன்று பேசப்படுகின்றது. ஆனால் ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்னால் சென்று போராட்டம் நடத்திய ஹிருணிக்காவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றது. நாட்டிலுள்ள பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைக்கவே அவர் ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்றார்.
நாம் 15 ஆம் திகதி கொழும்பில் வந்து போராடுவோம். கொழும்பை சுற்றிவளைப்போம். முடிந்தால் தடுத்து பாருங்கள் என ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றோம்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment