செப். 15 இல் திறப்புவிழா காண்கிறது தாமரை கோபுரம்

299135626 6327510847276458 5058916452112914948 n

கொழும்பு தாமரை கோபுரம் அடுத்த மாதம் செப்ரெம்பர்- 15 ஆம் திகதி திறக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கோபுரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 செப்ரெம்பர் 16ஆம் திகதி வைபவ ரீதியாக திறந்து வைத்தார். எனினும் பின்னர் மக்கள் யாரும் பார்வையிட எந்தவொரு வணிக செயற்பாட்டிற்கோ பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது கொழும்பு தாமரை கோபுரம் தனது அடுத்த கட்ட வணிகத் திட்டத்திற்கான முதலீட்டு வாய்ப்புகளுக்காக திறக்கப்படவுள்ளது. இதற்கான விளம்பரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

இங்கு சர்வதேச அளவிலான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

356 மீட்டர் உயரமான இந்த கோபுரம், தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக கருதப்படுவதுடன், உலகிலேயே 19ஆவது உயரமான கோபுரமாகவும் திகழ்கின்றது.

இந்த வாய்ப்புகளில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள வர்த்தகர்கள் கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

#SriLankaNews

Exit mobile version