அதிக விலைக்கு அரிசி விற்பனை! – ஒரு லட்சம் தண்டம்

law

யாழில் அரிசியின் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த இரு வர்த்தகர்களும் , சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவரும் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புகொண்டமையை அடுத்து மூவருக்கும் தலா ஒரு இலட்ச ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளை நடாத்தி , அரிசியை நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்கள் மற்றும் எரிவாயு சிலிண்டரை பாவனையாளருக்கு வழங்காது பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் என மூவருக்கு எதிராக தனித்தனியாக நீதிமன்றில் வழங்கு தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு விசாரணைகளின் போது வர்த்தகர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டமையை அடுத்து , மூவருக்கும் நீதிமன்று தலா ஒரு இலட்ச ரூபா தண்டம் அறவிட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version