இலங்கைசெய்திகள்

இனவாதத்தை தூண்ட முயற்சிக்கும் கஜேந்திரகுமார் எம்.பி – கடும் தொனியில் எச்சரிக்கும் தேரர்

Share
7 30
Share

இனவாதத்தை தூண்ட முயற்சிக்கும் கஜேந்திரகுமார் எம்.பி – கடும் தொனியில் எச்சரிக்கும் தேரர்

சமஷ்டி தீர்வு கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) இனவாதத்தை தூண்ட முற்படுகின்றார் என ஜனசத்த பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்

அவர் இவ்வாறு செயற்பட்டால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு கஜேந்திரகுமாருக்கு எங்கு செல்ல வேண்டிவரும் என தெரியாது என சீலரத்தன தேரர் ( Seelarathana Thero) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடக சந்திப்பொன்றின் போதே இவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போது இனவாதத்தை பரப்பிவருகின்றார். அவர் கொழும்பில் தான் வாழ்கின்றார்.

கொழும்பு மக்கள் அவருக்கு துளியளவும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் வடக்குக்கு சென்று மக்கள் ஏன் தவறாக வழிநடத்த வேண்டும்?

அதுமட்டுமல்ல இந்திய பிரதமருக்கு கடிதமொன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.

சமஷ்டி முறைமைக்கு அழுத்தம் கொடுக்குமாறு அக்கடிதம் ஊடாக கஜேந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கஜேந்திரகுமாரின் தேவைக்கேற்ப 13 ஐ நடைமுறைப்படுத்தவே, அதிகாரத்தை பகிரவோ ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக்கூடாது.

கஜேந்திரகுமார் இனவாதத்தை தூண்டினால் நாம் சும்மா இருக்க மாட்டோம். பிறகு அவருக்கு எங்கு செல்ல வேண்டிவருமோ தெரியவில்லை.

இனவாதத்துக்கு இடமளிக்ககூடாது. இனவாதத்தை தூண்டினால் நாடு முன்னேறாது. டயஸ்போராக்களின் கோரிக்கைக்கேற்பவே கஜேந்திரகுமார் சமஷ்டி கோருகின்றார்.

டயஸ்போராக்களிடம் பணம் வாங்கினால் பரவாயில்லை, ஆனால் இனவாதத்தை தூண்ட இடமளிக்கமாட்டோம். வடக்கில் உள்ள விகாரைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என சீலரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...