“ இணைத்தலைவரை நாடியும் உரிய பயன் கிட்டவில்லை. மனுக்களை கையளித்தும் இன்னும் தீர்வு இல்லை. இனி என்ன செய்வது,” இவ்வாறு உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார் சண்டிலிப்பாய் பிரதேச பெண் தொழில் முயற்சியாளர் ஒருவர்.
‘கிராமத்துடனான உரையாடல்’ மூலமான திட்டத்தின்கீழ் பிரதேச அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான பிரதேச மட்டத்திலான கலந்துரையாடல் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இதன்போது கருத்துகளை முன்வைப்பதற்கு தொழில் முயற்சியாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வேளையிலேயே அவர் இவ்வாறு உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார்.
“ எனது குடும்பம் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டது. இறுதியில் கணவருடைய தொழிலே எனக்கு கை கொடுத்தது.
காரைநகர் முதல் கைதடி வரை 70 வீதமான கடைகளில் எனது உற்பத்தி பொருட்களுக்கு சிறந்த கேள்வியுள்ளது. இதற்கு பலரும் நேசக்கரம் நீட்டினர்.
இரண்டு தொழிலாளர்களுடன் ஆரம்பித்த எனது நிறுவனம் இன்று 14 உறுப்பினர்களுடன் வெற்றி நடைபோடுகிறது. எனினும், விற்பனைக்கான வாகனமொன்று தற்போது தேவைப்படுகின்றது. இது விடயம் தொடர்பில் இணைத்தலைவரை இருமுறை அணுகி மனு கையளித்த போதும் இதுவரை உதவியோ – பதிலோ எனக்கு வழங்கப்படவில்லை.” – என்றார் அவர்.
இதற்கு பதிலளித்த இணைத்தலைவர், அரசிடம் வாகனத் திட்டம் எதுவும் இல்லை. குத்தகை நிறுவனத்துடன் பேச்சு நடத்தி அதனை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றேன் – என்றார்.
#SriLankaNews
Leave a comment