யாழ்ப்பாணத்திலும் அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் நேற்று முதல் அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள் வீடுகள் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டும் வருகின்றன.
இந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதனின் அலுவலகங்களும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் அலுவலகங்களுக்கு அருகில் பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment