புலம்பெயர் நாடுகளில் குறிவைக்கப்படுகின்ற தளபதிகளின் மனைவிகள்!

tamilni 180

புலம்பெயர் நாடுகளில் குறிவைக்கப்படுகின்ற தளபதிகளின் மனைவிகள்!

ஒப்பரேஷன் துவாரகா விடயத்தில் புலம்பெயர் நாடுகளில் என்னவென்னவெல்லாம் நடக்கின்றது என்று தேடல்களை மேற்கொண்டபோது, அதிர்ச்சிகரமான பல சாட்சிகளை கேட்கக்கூடியதாக இருந்தது.

தலைவர் பிரபாகரன் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கென்று கூறி பல இலட்சம் பவுன்ஸ் வர்த்தகர்களிடம் இருந்து திரட்டப்பட்டதை அறியக்கூடியதாக இருந்தது.

முகமூடி அணிந்துவந்த பெண் தன்னை துவாரகா என்று கூறிக்கொண்டு பொதுமக்களிடம் உதவிக்கோரிய போது அழுதுகொண்டு பணத்தை அள்ளி வழங்கிய சம்பவங்களும் இருக்கின்றன.

கடனாக என்று கூறியும் ஏராளமான பணம் அறவிடப்பட்டிருக்கின்றது.

சுவிஸ்சர்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிலர் துவாரகா என்று கூறி ஒரு பெண்ணுடன் பேசவைக்கப்பட்டதாகவும் சாட்சிபகிர்ந்திருந்தார்கள்.

அதேவேளை முன்னாள் போராளிகள் கவனமாக அனுகப்பட்டு, புலம்பெயர் நாடுகளில் முன்நகர்த்தப்படுகின்ற பெண் துவாரகாதான் என்று உறுதிப்படுத்தும் படியாக கோரப்படுகின்றார்கள்.

குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பில் களமாடி வீரமரணம் அடைந்த தளபதிகள், பொறுப்பாளர்களது மனைவிகள் தொடர்பு கொள்ளப்பட்டு மிரட்டப்படுகின்ற சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன.

Exit mobile version