பிரதி சபாநாயகருக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது, தான் யாரை ஆதரித்து வாக்களித்தார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபைக்கு, காட்சிப்படுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டது.
பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சபையில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
11 கட்சிகளின் சார்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும், எதிரணியின் சார்பில் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் சபாபீடத்துக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டிக்கு அருகில் வந்த சஜித் பிரேமதாச, தான் யாருக்கு சார்பாக வாக்களித்தார் என்பதை, வாக்கு சீட்டை சபையில் காண்பித்து தெரியப்படுத்தினார். அவரின் இந்த செயலை சபாநாயகர் கண்டித்தார்.
#SriLankaNews
Leave a comment