பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நாளாகவும் இன்று வேலணையில் இடம்பெற்றது.
வேலணையில் இடம்பெற்ற இந்த நடவடிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களிற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கையின் இரண்டாம் நாள் வேலணை, ஊற்காவற்றுறை, காரைநகர் ஆகிய பகுதிகளில் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment