திருகோணமலை கந்தளாய் பகுதியில் 45 ஆயிரம் தொன் நெல்மூடைகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்களஞ்சியசாலைகள் 3 ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆகியோரால், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த மூன்று நெல் களஞ்சியசாலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து 3 நெற்களஞ்சியசாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என நுகர்வோர் அதிகார சபையின் திருகோணமலை பணிப்பாளர் கே.டி வசந்தன் தெரிவித்தார்.
Leave a comment