வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலை ஒன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்மூடைகள் தொடர்பான விபரங்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகளே கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் ஹொறவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றில், கோதுமை மா மூடைகளில் நியாய விலை காட்சிப்படுத்தப்படாமையினால் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Leave a comment