vvv
இலங்கைசெய்திகள்

ஒக்டோபரில் பாடசாலை ஆரம்பம் – டிசெம்பர் விடுமுறை இல்லை

Share

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு தளர்த்தப்பட்டதன்பின் ஒக்டோபர் மாதம் முதல் பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டால் வழமை போன்று டிசெம்பர் மாதம் வழங்கப்படும் விடுமுறை இந்த முறை வழங்கப்படமாட்டாது.

இவ்வாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலைகளை 4 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் விரைவில் திறக்கப்படவுள்ளன.

நாட்டில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 5,131 பாடசாலைகள் உள்ளன எனவும் அவற்றில் தரம் 1–5 வரையான வகுப்புக்கள் உள்ள பாடசாலைகள் 3884 எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த வகையில் தரம் 1–5 வரையான வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளை முதற்கட்டமாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...