யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை டிப்பர் வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கந்தையா சத்தியசீலன் முல்லைத்தீவு, முத்தையன்கட்டு வலதுகரை முத்துவிநாயகர் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment