piasri fernando
இலங்கைசெய்திகள்

பாடசாலை விடுமுறை ரத்து!

Share

டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் வாராந்தம் 5 நாட்களும் விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் வாராந்தம் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடத்தப்படுகின்றன.

பாடசாலைகளுக்கு போக்குவரத்து காரணங்களால் சமூகமளிக்க முடியாத நிலைமைகள் குறித்த முறைபாடுகள் எவையும் இதுவரையில் கிடைக்கவில்லை.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் அது குறித்து போக்குவரத்துசபை உள்ளிட்ட தரப்புடன் கலந்துரையாடி அந்த பிரச்சினையைத் தீர்த்து, வாராந்தம் 5 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட் பரவலுக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்திச் செல்வது குறித்த எச்சரிக்கை எதனையும் சுகாதார அமைச்சு இதுவரையில் முன்வைக்கவில்லை.

அதற்கான வழிகாட்டிகள் மற்றும் அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வழங்கினால் அதன்படி பாடசாலைகள் செயற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...