தரம் ஐந்து மாணவர்களுக்காகன 2021 புலமைப் பரிசில் பரீட்சை கொவிட்-19 தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்ட நிலையில் இன்று (22) காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
நாடாளாவிய ரீதியில் கடந்த ஆண்டுக்குரிய புலமைப்பரிசில் பரீட்சை சுகாதார வழிகாட்டல்களுடன் இன்று ஆரம்பமாகியுள்ளது.
2,943 பரீட்சை மையங்களில் இடம்பெறவுள்ள இந்தப் பரீட்சையில், 340,508 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
இதேவேளை மாணவர்களை உரிய காலநேரத்திற்குள் பரீட்சை மையங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews