image 50409473 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுணாவில் ஐஓசி எரிபொருள் நிலையத்தில் வரிசையைக் குழப்பி சேமிப்பு வங்கி ஊழியர்கள் அடாவடி

Share

நுணாவிலில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட ரோக்கன் அடிப்படையில் அதிகாலை முதல் வரிசையில் சுமார் 300 க்கும் அதிகமானவர்கள் காத்திருந்த போது, பிற்பகல் 4.30 மணியளவில் வரிசையின் இறுதியில் காத்திருந்த சுமார் 25 க்கும் மேற்பட்ட தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் வரிசையைக் குழப்பி எரிபொருள் பெற்றுச் சென்றமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒழுங்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்களும், அரசாங்க ஊழியர்களும் வாக்குவாத்த்தில் ஈடுபட்ட போதிலும், எதையும் பொருட்படுத்தாமல் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இதன் போது கடமையிலிருந்த காவல்துறையினரும் வாழாவருந்ததை அவதானிக்க முடிந்தது.

தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் வரிசையின்றி சென்றதைக் கண்டு, பின் வரிசையில் நின்ற ஹற்றன் நஷனல் வங்கி ஊழியர்களும் வரசையைக் குழப்பி கட்டுப்பாடுகள் ஏதுமின்றி முழுத் தாங்கியை நிரப்பிச் சென்றுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...