திருமலை கடலில் செய்மதி பாகங்கள்!!

image da91d5c960 1

திருகோணமலை கடற்பகுதியில் இந்திய செய்மதியின் உதிரிப் பாகங்கள் உடைந்து வீழ்ந்துள்ளன.

மீனவர் ஒருவர் கடற்றொழில் திணைக்களத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் இன்று போலா என்ற செய்மதியை விண்ணில் செலுத்தியது.

அதன் உடைந்த உதிரிப் பாகங்கள் இலங்கை கடற்பரப்பில் தரையிறங்கலாம் என இந்தியாவால் இலங்கை கடற்படைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறான உடைந்த பாகங்கள் சில திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version