விடுதலைப் புலிகளுக்கு தனித்த ஆட்சி! எந்நேரமும் தாக்குதல் நடத்தும் வளம்

rtjy 70

விடுதலைப் புலிகளுக்கு தனித்த ஆட்சி! எந்நேரமும் தாக்குதல் நடத்தும் வளம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், ஜே.வி.பி. கலவரத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது சர்வதேச அங்கீகாரமற்ற ஆயுத போராட்ட குழு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு தனித்த ஆட்சி, நிலம், நிர்வாக கட்டமைப்பு காணப்பட்டது. இலங்கை இராணுவத்தை எந்நேரமும் தாக்கும் கடல் மற்றும் வான் வழி தாக்குதலை நடத்தும் வளம் காணப்பட்டது.

ஆகவே விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச அங்கீகாரமற்ற ஆயுத போராட்ட குழு என்ற நிலையில் வைத்துக் கொண்டே அரசாங்கம் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர தலைமை தாங்கிய அரசியல்வாதிகள், இராணுவத்தளபதிகள் உட்பட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக ஒரு சில நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன. இது முற்றிலும் அநீதியானது.

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காக ஒரு சில நாடுகள் ஐ.நா சபையின் சாசனத்தையும் அடிப்படை கொள்கைகளையும் மீறியுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version