யாழில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பிரபலம்
யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
முதன்முறையாக யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விஜயம் செய்துள்ளார்.
இந்நிலையில், கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்திலிருந்து மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஷ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.
இதன்போது யாழ்ப்பாண இளைஞர்களுடன் சந்தோஷ் நாராயணன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ள புகைப்படமே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது.
Comments are closed.