சங்கத்தானை விபத்தில் குடும்பஸ்தர் பலி!!!!

சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ( சாவகச்சேரி இந்து கல்லூரி அருகாமையில்) இன்று மாலை 05.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி நகரில் இருந்து சங்கத்தானை நோக்கி மோட்டார் வண்டியில் வருகை தந்த குறித்த நபர், A9 வீதியின் வலது பக்கமாக திரும்ப முற்பட்ட வேளையில் அவரின் பின்னால் வந்த மோட்டார் வண்டி மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த குறித்த நபர் அங்கு நின்ற இளைஞர்களால் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சங்கத்தானை,சாவகச்சேரியை சேர்ந்த சண்முகலிங்கம் பிரதாப் (வதனி ஜூவலரி கொடிகாமம் உரிமையாளர் மகன்) என்பவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மற்றைய நபர் சிறிய காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2023 01 29 at 6.59.01 PM

#SriLankaNews

Exit mobile version